×

ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இரவு, பகலாக பணியாற்றுகிறது; பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது அரசின் கடமை...முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது அரசின் கடமை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். சேலம் சென்ற அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது;

* கொரோனா தடுப்பு பணியில் சேலம் மாவட்ட ஆட்சியர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
* அமைப்பு சாரா தொழிலாளர் நலனுக்கான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
* சேலத்தில் 9 இடங்களில் கொரோனா தடுப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா பரவல் தடுப்பு வளையங்களில் 24 பேருக்கு  பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
* சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

* கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
* சேலத்தில் 78 மளிகை கடைகள் மூலமாக மக்களின் வீடுகளுக்கு பொருள் விநியோகம் செய்யப்படுகிறது.
* 1,000 ரூபாய் நிவாரணம் 98 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
* வேளாண் பொருட்களை விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை.
* ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
* மத்திய அரசுக்கு முன்பே 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்தது.

* தமிழகத்திற்கு முதற்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன.
* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர்.
* தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது அரசின் கடமை.
* ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இரவு, பகலாக அயராது பணியாற்றி வருகிறது.
* அதிக சோதனை கருவிகள் தமிழகத்திற்கு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
* மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனைப்படியே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

* கிராமப்புற தொழிற்சாலைகளுக்கு தடை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
* ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
* கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
* சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Palanisamy ,government ,victims ,State ,Nadu , Tamilnadu, Government duty, Chief Minister Palanisamy
× RELATED சென்னையில் சாலையோர நடைபாதைகளில்...